[ 2014 ]
12/8/2014
News Coverage on 3 Dec 2014
11/4/2014
GST Important Notice
9/2/2014
Music Licensing Confusion (Tamil)
9/2/2014
Music Licensing Confusion (Mandarin)
9/2/2014
Music Licensing Confusion (English)
9/2/2014
Kekeliruan Tentang Pelesenan Muzik
[ 2010 ]
5/30/2010
貿消局接歌曲版權單位投訴 手機店涉侵權遭取締
1/15/2010
非法下載歌曲通緝女子 貿部突擊住家.罪成可罰6億

:\\ PPM NEWS

Music Licensing Confusion (Tamil)
By :


9/2/2014

ஊடகப் பிரசுரம்

இசை உரிமைப்பாடு கொண்டகுழப்பகள்

2 செப்டம்பர் 2014 – கோலாலும்பூர் -  இசை ஒலிப்பதிவு நிறுவனங்களின் கூட்டாக உரிமத்தை நிர்வகிக்கும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கும் மலேசிய பொது கலைநிகழ்வு நிறுவனம்(PPM) தற்போது இசை உரிமம் சார்ந்து பொது மக்களிடையே பல்வேறு கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் ஆட்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் மலேசிய ஒலிப்பதிவு கலைஞர்கள் அமைப்பின்(RPM) சிறப்பு உரிமம் பெற்ற முகவராக செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.

டத்தோ ஷீலா மஜீட்டின் தலைமையில் 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட RPM ஒலிப்பதிவு கலைஞர்கள் மற்றும் இசை கலைஞர்களைப் பிரதிநிதிக்கிறது. அதோடு அது இசை துறையின் முக்கிய அமைப்புகளான மலேசிய ஒலிப்பதிவு துறை சங்கம்(RIM), பாடலாசிரியர்கள் காப்புரிமை நிறுவனம்(MACP), PPM மற்றும் மலேசிய படைப்பாளர் சங்கம்(Persatuan Karyawan Malaysia) ஆகியவற்றின் ஆதரவையும் பெற்றது(16 ஆகஸ்டு 2013 வெளியிடப்பட்ட ஊடகப் பிரசுரம் இணைக்கப்பட்டுள்ளது.)

தற்போது சூடாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பிரச்சனைகளை ஒட்டி RIM மற்றும்  PPM தலைமை செயற்குழு அதிகாரி திரு. ரமணி ராமலிங்கம் கூறுகையில் ‘ காப்புரிமை விதிமுறை 2012(உரிமம் அமைப்பு) கீழ் ஒரே பிரிவின் கீழ் 2 கூட்டு உரிம அமைப்புகள் (i.e. ஒலிப்பதிவு கலைஞர்கள்)  இருப்பது  குறித்து பல சந்தேகங்கள் எழுவதை நாங்கள் அறிந்து உள்ளோம்’ என தெரிவித்தார்.

 ‘நமது துறை சார்ந்த முடிவின் படி 1989 மற்றும் 1988 ஆண்டிலிருந்து பாடலாசிரியர்களை MACP பிரதிநித்து, PPM ஒலிப்பதிவு நிறுவனங்களை பிரதிநித்து  ஒரே உரிம அமைப்பு செயல்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது செயலற்று போன PRISM  நிறுவனத்திற்கு பதிலாக 1 ஜனவரி 2012 முதல் PPM  முழுமையான ஆதரவை RPM-க்கு வழங்குவதோடு 2003-இல் கலைஞர்களுக்கு சந்தை விகிதத்திற்கேற்ப வழங்குவதாகவும் ஏற்கப்பட்ட உரிமத் தொகையைத் தொடர்ந்து தற்காக்கவும் உறுதி கொண்டிருக்கிறது’ என்றார்.

 

 “நாங்கள் முறையாக மலேசிய அறிவார்ந்த சொத்துடைமை அலுவலகத்திற்கு(MyIPO) விண்ணப்பித்து இணைந்த இசை உரிமை செயற்குழுவை அமைத்து  தற்போது நாடு முழுவதும் இசைதுறையில் நிலவி வரும் பிரச்சனையை அடையாளம் காண்பதோடு அனைத்து தரப்பினரும் திருப்தி அடையும் வகையில் நல்ல முடிவை இறுதியில் கிடைப்பதையும் உறுதி செய்வோம்” என்றார் ரமணி.

PPM சிறப்பாக பிரதிநிதிக்கும் உரிமங்களைப் பெற்றிருப்பதோடு,பொது கலைநிகழ்வின் ஒலி,இசை காணொளி மற்றும் காராவ்கோ ஒலிப்பதிவு ஆகியவை காப்புரிமை சட்டம் 1987 சிவில் மற்றும் கிரிமினல் மீறல்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை பெற்றிருக்கிறது.

RPM  மற்றும் PRISM நிறுவனமும், மற்றொரு கலைஞர்கள் உரிமம் அமைப்பு(RPM-இல் ஒருங்கிணைப்பட்ட அடுத்தநிலையிலான நிறுவனம்) இணைந்து கலைஞர்களுக்கு அவர்களின் பொது கலைநிகழ்வு மற்றும் பதிவு செய்யபட்ட நிகழ்வுகளுக்கும் உரிய உரிமத்தொகையை(முறையான கட்டணம்) பிரிவு 16B கீழ் பெற்று தர வழிவகுக்கும்..

PPM  தொடர்ந்து  RIM  ஒலிப்பதிவு நிறுவன அங்கத்தினர்கள் RPM-இன் ஒலிப்பதிவு கலைஞர்கள் அங்கத்தினர்கள் அனைவருக்குமான கடமையை ஆற்றுவதோடு, இசை பயனீட்டாளர்கள் எவ்வித இசை உரிமம் சம்பந்தமான பிரச்சனைகளைக் களைய PPM மற்றும் RPM-ஐ அணுக வேண்டுமெனவும் திரு.ரமணி தெரிவித்தார்,

PRISM நிறுவனம் தொடர்பாக, RIM & PPM ஆகிய அமைப்புகள் PRISM நிறுவனம் ஏற்படுத்திய குழப்பங்கள் மற்றும் காப்புரிமை மீறல் தொடர்பாக வழக்கு தொடுத்திருப்பதாகவும் அவ்வழக்கு செப்டம்பர் 2014 இறுதியில் உயர் நீதிமன்ற விசாரணைக்கு வரவிருப்பதாகவும் திரு.ரமணி தெரிவித்தார்.ஆகவே PRISM நிறுவனம் தொடர்பாக எவ்வித கருத்துகளையும் வெளியிடுவதை RIM & PPM தவிர்க்கின்றது.

மேல்விபரங்களுக்கு, வணிக முதலாளிகள் அரசு துறைகளை நேரடியாக தொடர்பு கொள்ளவோ அல்லது அவர்களின் வணிக சங்கங்களின் வழியாகவும்  செய்யலாம் என்றும் அவர்  கூறினார்.

சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அறிமுகம்

RIM

Recording Industry Association of Malaysia
மலேசிய ஒலிப்பதிவு துறை சங்கம்

உள்ளூரில் உள்ள 300-க்கு அதிகமான ஒலிப்பதிவு நிறுவனம் மற்றும் வணிகங்களைப் பிரதிநிதிக்கும் இவ்வமைப்பு 1978-இல் உருவாக்கப்பட்டது,உள்ளூர் மற்றும் அனைத்துலக ஒலி, இசை காணொளி, காராவ்கே ஒலிப்பதிவு, தயாரிப்பு, உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. மலேசிய சந்தையில் கிட்டதட்ட 95% சட்டரீதியான அனைத்து  ஒலிப்பதிவு சார்ந்த எண்ணிக்கை இதுவாகும்.

www.rim.org.my

 

PPM

Public Performance Malaysia Sdn Bhd
மலேசிய பொது கலைநிகழ்வு நிறுவனம்

1988-இல் நிறுவப்பட்ட இந்த உரிம அமைப்பு RIM உறுப்பினர்களைப் பிரதிநிதித்து பொது கலைநிகழ்வு, ஒளிபரப்பு, மறுதயாரிப்பு மற்றும் மலேசியாவைச் சார்ந்த அனைத்துலக ஒலி, இசை காணொளி, காராவ்கே ஒலிப்பதிவுஆகியவற்றின் காப்புரிமை வாடகை ஆகியவற்றை பெற்று தருகிறது.
www.ppm.org.my

 

MACP

Music Authors’ Copyright Protection (MACP) Berhad
இசை பாடலாசிரியர் காப்புரிமை பாதுகாப்பு நிறுவனம்(MACP)

1989-இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் மலேசிய முழுவதுமுள்ள 3100 இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த பொது கலைநிகழ்வு மற்றும் ஒளிபரப்பு சம்பந்தமான உரிமங்களை பெற்று தருகிறது. தன்னை போன்ற அனைத்துலக நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்தும் MACP மலேசிய கலைஞர்களின் அனைத்துலக உரிமங்களையும் பெற்று தருகிறது.
www.macp.com.my

 

RPM

Recording Performers Malaysia Berhad
மலேசிய ஒலிப்பதிவு கலைஞர்கள் நிறுவனம்

நிறுவனச் சட்டம்1965 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனம், ஒலிப்பதிவு கலைஞர்கள்மற்றும் இசை கலைஞர்களின் உரிமங்களைப் பெற்று தருவதோடு, கலைஞர்களின் பதிவு செய்யப்பட்ட கலைநிகழ்வுகளின் உரிமங்களை நியாயமாக  கலைஞர்களுக்கு உரிமத்தொகையை விநியோகிக்கவும் செயல்படுகிறது.
www.rpm.my

 

 

ஊடகப் பிரசுரம் சம்பந்தமான மேல்விபரங்களுக்கு, www.rim.org.my, www.ppm.org.my மற்றும்  www.rpm.my செல்லவும் அல்லது தொடர்பு கொள்ளுங்கள்:

 

ரமணி ராமலிங்கம்
தலைமை செயற்குழு அதிகாரி

Recording Industry Association of Malaysia (RIM)
மலேசிய ஒலிப்பதிவு துறை சங்கம்

Public Performance Malaysia Sdn Bhd (PPM)
மலேசிய பொது கலைநிகழ்வு நிறுவனம்(RIM)

மின்னஞ்சல்: ramani@rimgroup.my
தொலைபேசி : 603-62072838